செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2017-12-31 19:14 IST   |   Update On 2017-12-31 19:14:00 IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள வாதிரிப்பட்டி, திருவேங்கைவாசல், புல்வயல், இடையப்பட்டி, புங்கினிபட்டி, குடுமியான்மலை, பொய்கால்பட்டி, தாண்றீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அன்னவாசல் பகுதிகளில் கலை நுணுக்கத்துடனும், பல்வேறு வடிவங்களிலும் மண்பானைகள் தயார் செய்யப்படுவதால் இவை தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பானைகள் தவிர தண்ணீர் தொட்டிகள், மண் அடுப்புகள், சட்டிகள் உள்ளிட்டவையும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

இருப்பினும் ஆண்டுக்கு ஆண்டு மண்பானை விற்பனை சரிந்து வருவதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Similar News