செய்திகள்

மின் வயர் அறுந்ததால் மின்சார ரெயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

Published On 2017-12-30 15:58 IST   |   Update On 2017-12-30 15:58:00 IST
தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரெயிலில் மின் வயர் அறுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தாம்பரம்:

அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை மின்சார ரெயில் வந்தது. அதன் பின் வந்த ரெயில் மேல்மருவத்தூர் நோக்கி காலை 9 மணிக்கு புறப்பட்டது.

தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு 9.20 மணிக்கு ரெயில் வந்தபோது மின் வயர் அறுந்து இருப்பதை என்ஜின் டிரைவர் பார்த்தார். உடனே ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் ரெயில் மீது ஏறி அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி மாநகர பஸ்சில் சென்றனர்.

இந்த கோளாறால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 1½ மணி நேரத்துக்கு பிறகு அறுந்து விழுந்த மின் வயர் சரிசெய்யப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

Similar News