செய்திகள்

பெங்களூரில் பனி மூட்டம்: சென்னை விமானங்கள் தாமதம்

Published On 2017-12-30 15:07 IST   |   Update On 2017-12-30 15:07:00 IST
பெங்களூரில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது
ஆலந்தூர்:

பெங்களூரில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது.

நள்ளிரவு முதல் இன்று காலை 9 மணி வரை பனி மூட்டம் நீடித்தது.

பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.

அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்கள் தாமதமாக வந்தன. விமானங்கள் செல்வதிலும், வருவதிலும் சுமார் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.

லண்டனில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரை இறங்கியது. அதன் பிறகு இன்று பகல் 12 மணியளவில் பெங்களூர் புறப்பட்டு சென்றது. பெங்களூர் செல்ல வேண்டிய சரக்கு விமானமும் சென்னையில் தரை இறங்கி பின்னர் பெங்களூர் புறப்பட்டு சென்றது.

Similar News