செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் விமானத்துக்கு பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்சில் தீப்பிடித்தது

Published On 2017-12-29 15:57 IST   |   Update On 2017-12-29 15:57:00 IST
சென்னை விமான நிலையத்தில் விமானத்துக்கு பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்சில் தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ஓடுபாதை அருகே நிறுத்தப்பட்டு இருந்த ‘இண்டிகோ ஏர் லைன்ஸ்’க்கு சொந்தமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்சை டிரைவர் இயக்கினார்.

அப்போது திடீரென பஸ்சில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பினார்.

தகவல் அறிந்ததும் விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர்.

பஸ்சில் இருந்த பேட்டரியில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்ததாக தெரிகிறது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

Similar News