செய்திகள்

காஞ்சீபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்களுக்கு ரூ. 3½ கோடி பொங்கல் போனஸ்

Published On 2017-12-29 14:48 IST   |   Update On 2017-12-29 14:48:00 IST
காஞ்சீபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நெசவாளர்களுக்கு ரூ. 3½ கோடி போனஸ் தொகை வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பட்டு நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 1,252 பட்டு நெசவாளர்களுக்கு ரூ.3 கோடியே 33 லட்சம் போனஸ் தொகையை சங்கத்தின் தலைவர் செல்வராஜ், கைத்தறித்துறை இணை இயக்குனரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.பிரகாஷ் வழங்கினர்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜி.விஸ்வநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரத்தினவேல், பி.சுந்தர மூர்த்தி, எம்.வரதராஜன், ஆர்.காமாட்சி, ஆர்.புனிதா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மேலாளர் டி.ரவி நன்றி கூறினார்.

Similar News