செய்திகள்

கல்பாக்கத்தில் அணுமின் நிலைய ஊழியர் வீட்டில் கொள்ளை

Published On 2017-12-28 11:40 IST   |   Update On 2017-12-28 11:40:00 IST
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ் ஜோசப். கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு நகரியத்தில் வசித்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவர் குடும்பத்துடன் சொந்த ஊரான கேரளா சென்றுவிட்டார். இந்த நிலையில் அவரது வீட்டு கதவை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த பணம்- நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஜேம்ஸ் ஜோசப் வந்த பின்னரே எவ்வளவு பணம்- நகை கொள்ளை போனது என்பது தெரியவரும். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருறார்கள்.

Similar News