செய்திகள்

அறந்தாங்கியில் இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-12-16 21:52 IST   |   Update On 2017-12-16 21:52:00 IST
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அறந்தாங்கி:

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூ.கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அந்த மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தர்ம ராஜன், விவசாய சங்க மாவ ட்டச்செயலாளர் மாதவன், மாவட்ட பொருளாளர் திருநாவுக் கரசு,மாவட்ட நிர்வா கக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி  மாவட்ட செயலாளர் சிங்க முத்து, ஜெபமாலை பிச்சை, தண்டபாணி, அறந்தாங்கி நகரச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News