செய்திகள்

அறந்தாங்கி-முசிறியில் 2 இளம்பெண்கள் தற்கொலை

Published On 2017-12-13 17:37 IST   |   Update On 2017-12-13 17:37:00 IST
அறந்தாங்கியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அறந்தாங்கி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி கலைமதி (வயது30). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு  நீப்பிகஸ்ரீ(வயது2) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சண்முக சுந்தரம் தற்போது தனது மனைவி, குழந்தையுடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை 2ம் தெருவில் குடியிருந்து வருகிறார். சம்பவதன்று கலைமதி, தான் குடியிருந்து வரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

மண்ணச்சநல்லூர் தாலுகா வாழ்மானபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் சகுந்தலா(25).  மாற்றுதிறனாளி. இவருக்கு நீண்ட நாளாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இந் நிலையில் நேற்று முன்தினம் முசிறி அருகே ஆனைப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சகுந்தலா தனது தாயார் அம்பிகாவுடன் சென்றுள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத சமயம் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இருந்த இளம்பெண் சகுந்தலா அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்று ள்ளார். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இது பற்றி அம்பிகா முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News