செய்திகள்
காஞ்சீபுரத்தில் ரூ.8 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
காஞ்சிபுரத்துக்கு பெங்களூரில் இருந்து லாரி மூலம் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவில் ஒரு குடோனுக்கு பெங்களூரிலிருந்து குட்கா பண்டல்களை ஏற்றி வருவதாக சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது பெங்களூரிலிருந்து ஒரு லாரியில் குட்கா பார்சல்களை ஏற்றிக் கொண்டு ஒரு குடோனில் இறக்க முற்பட்டனர்.
உடனே போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து அதில் கடத்தி வரப்பட்ட சுமார் 1¾ டன் எடையுள்ள 123 பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்ற போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் இந்த குட்கா பண்டல்கள் காஞ்சீபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் பி.எஸ்.கே. தெருவை சேர்ந்த அசாராம் (27), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஜெகதீஷ் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். குட்கா ஏற்றி வர பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.