செய்திகள்
திருப்பாச்சேத்தியில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திருப்பாச்சேத்தியில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
திருப்புவனம் தாலுகா வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லச்சாமி (வயது 65), விவசாயி. இவரது தம்பி சேதுராமன் (48). இவர் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (48) என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பிக் கொடுக்காததால் சுப்பிரமணியன், சேதுராமனின் அண்ணன் செல்லச்சாமியிடம் சென்று கேட்டார்.
அப்போது சுப்பிரமணியன் கொலை மிரட்டல் விடுத்ததாக திருப்பாச்சேத்தி போலீசில் சேதுராமன் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.