செய்திகள்
காரைக்குடியில் கந்து வட்டி பிரச்சினையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: 5 பேர் மீது வழக்கு
காரைக்குடியில் கந்து வட்டி பிரச்சினையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி:
காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வழிவிட்டான் (வயது 25), மீன் வியாபாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீ, முத்துமீனாள், சுந்தரபாண்டி, கருப்பாயி, ராஜாம்பாள் ஆகிய 5 பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கினார்.
இந்த நிலையில் 5 பேர் கூடுதல் வட்டி கேட்டு வழிவிட்டானை மிரட்டியதாக தெரிகிறது. மேலும் அவரது சகோதரர் பிரகாசையும் மிரட்டியுள்ளனர்.
இதில் மனம் உடைந்த பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசில் வழிவிட்டான் கொடுத்த புகாரின் பேரில் 4 பெண்கள் உள்பட 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.