செய்திகள்
விருத்தாசலத்தில் மர்மகாய்ச்சலுக்கு கூலித்தொழிலாளி பலி
விருத்தாசலத்தில் மர்மகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் நாச்சியார் பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). கூலிதொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அறிந்த சுகாதார துறையினர் நாச்சியார்பேட்டை பகுதியில் முகாமிட்டு வேறு யாரேனும் மர்மகாய்ச்சலால் பாதித்துள்ளார்களா? என்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அப்பகுதியில் முகாட்டு தீவிர சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.