செய்திகள்

பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2017-10-13 20:10 IST   |   Update On 2017-10-13 20:10:00 IST
பெண்ணாடம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தி.மு.க. பிரமுகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள எரப்பாயூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது55). தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று மாலையில் மொபட்டில் பெண்ணாடம் சென்றார்.

பின்னர் அவர் இரவு வீடு திரும்பினார். எரையூர் சர்க்கரை ஆலை அருகே வந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரங்கநாதன் ஓட்டிவந்த மொபட் மீது மோதியது.

இதில் ரங்கநாதன் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரங்கநாதனை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News