செய்திகள்

கோபி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-09-19 17:12 IST   |   Update On 2017-09-19 17:12:00 IST
கோபி அருகே வாழ்க்கையில் வெறுப்படைந்த கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி அடுத்த அரசூர் தட்டாம்புதூரை சேர்ந்தவர் மாரப்பன் (வயது60). கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தனது மனைவியுடன் மாரப்பன் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே மாரப்பன் வீட்டில் இருக்கும் போது தற்கொலை செய்வதற்காக முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.

வாழ்க்கையில் வெறுப்படைந்த மாரப்பன் சம்பவத்தன்று தனது வீட்டில் கயிற்றை கொண்டு தூக்குப்போட்டு கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை பார்த்து அதிர்ச்சியடைந்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சு உதவியுடன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News