ஈரான் போர்: சீனா, ரஷியா குறித்து அமெரிக்கா சொல்வது என்ன? #Iran War
- அமெரிக்காவுக்கு எதிரான போரில் சீனா ஆதரவு தெரிவித்தது.
- பேச்சுவார்த்தை மூலும் போரை முடிவுக்கு கொண்டு வர சீனா, ரஷியா அழைப்பு விடுத்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தனி நாடாக நின்று வளைகுடா நாடுகள், இஸ்ரேல், துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்க இந்த போர் நீளும் என்று தெரியவில்லை.
அமெரிக்காவுக்கு பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் விமான தளத்தை வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு ரஷியா, சீனா கண்டனம் தெரிவித்தன. பேச்சுவார்த்தை மூலமாக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.
அதைத்தவிர்த்து போரில் இன்று விலகியே உள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஹெக்சேத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சீனா, ரஷியா குறித்து கூறுகையில் "சீனா மற்றும் ரஷியா குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. சீனாவும், ரஷியாவுடம் நீண்ட காலமாக ஈரானுடன் ராஜாங்கரீதியாலான மற்றும் வர்த்தகம் தொடர்பான உறவு வைத்துள்ளன. இங்கு அவர்கள் உண்மையிலேயே ஒரு காரணியாக அல்ல. எங்களுடைய பிரச்சினை அவர்களுடன் இல்லை. ஈரானின் அணுஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில்தான் அமெரிக்காவின் முழு கவனம் உள்ளது" என்றார்.