அந்தியூர் அருகே யானை தூக்கி வீசியதில் விவசாயி பலி
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த சிந்தாகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62) இவரது மனைவி பெயர் தவசியம்மாள்(55).
இவர்களுக்கு செந்தில் குமார்(35),குமார்(30) என்ற 2 மகன்களும், சக்தி (28) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
பழனிசாமிக்கு வனப்பகுதியையொட்டி 2 ஏக்கர் தோட்டம் உள்ளது. தோட்டத்தில்அவர் கம்பு பயிரிட்டிருந்தார். இரவில் காவல் பணிக்காக தோட்டத்தில் படுத்துக் கொள்வாரம் காலையில் எழுந்து வீட்டுக்கு சென்று விடுவார். நேற்றும் வழக்கம்போல் விவசாயி பழனிசாமி தோட்டத்துக்கு சென்றார். அங்கேயே இரவில் படுத்துக் கொண்டார்.
இன்று அதிகாலை 1 மணியளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. யானை பிளிறல் சத்தம் கேட்டதும் பழனி சாமி கண்விழித்தார்.அருகே யானை நின்று கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். யானையிடமிருந்து தப்பிக்க எழுந்து ஓடினார். ஆனால் யானை அவரை விரட்டி துதிக்கையால் தூக்கி வீசியது.இதில் படுகாயம்அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிறகு அந்த யானை தோட்டத்தில் மேய்ந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.
காலை அங்கு சென்ற பார்த்தபோது பழனிசாமி இறந்துகிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர் பிறகு பழனிசாமி உடலை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.