செய்திகள்

ஆரணி அருகே மழை வேண்டி விதவைகள் ஒப்பாரி வைத்து நூதன பூஜை

Published On 2017-08-31 17:18 IST   |   Update On 2017-08-31 17:18:00 IST
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள கூர்வாடி ஏரியில் மழை வேண்டி பாடை கட்டி கணவனை இழந்த தாய்மார்கள் ஓன்று கூடி ஓப்பாரிவைத்து நூதன பூஜை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஆரணி:

ஆரணி அடுத்த மலையாம்பட்டு கூர்வாடி ஏரி இந்த ஏரியிலிருந்து சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்திற்கு தண்ணீர் சென்று விவசாயம் செய்து வந்துள்ளனர்.

மேலும் இந்த கூர்வாடி ஏரியில் தண்ணீரின்றி தற்போது வறண்டு கிடக்கின்றதால் மலையாம்பட்டு, புங்கம்பாடி ஆகிய சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாமல் முற்றிலும் பாதிப்புடைந்தது.

மேலும் இதனால் மலையாம்பட்டு கிராமத்தில் மோகனவேலு தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓன்று கூடி அரக்கன் போன்ற உருவபொம்மைக்கு பாடை கட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

பின்னர் மலையாம்பட்டு ஏரியில் பாடைக்கு சடங்குகள் செய்து கணவனை இழந்த தாய்மார்கள் ஓன்று கூடி ஓப்பாரிவைத்து நூதன முறையில் வருண பகவானை வேண்டினார்கள்.

மேலும் இதுபோல் நூதன முறையில் ஓப்பாரிவைத்தால் மலையாம்பட்டு கிராமத்தில் மழைவரும் என்று பொதுமக்களின் ஐதீகமாக உள்ளதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மணிசெல்வரசு, சம்பத், ராஜீ மேஸ்திரி, ராஜா, ஆறுமுகம் ஆகியோரும் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Similar News