செய்திகள்
ரோந்து படகால் மோதி மூழ்கடிப்பு: கடலில் விழுந்து தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
புதுக்கோட்டை மீனவர்கள் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் ரோந்து படகை மோதியதில் மீனவர்கள் கடலில் விழுந்தனர். அவர்களை அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற அவர்களில் ராசு என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற காளி, உதயா, அஞ்சான், முருகன் ஆகியோர் நெடுந்தீவுக்கு தென் கிழக்கு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகு மீது தங்களது ரோந்து படகை மோதினர். இதில் நிலை தடுமாறிய விசைப்படகில் இருந்து 4 மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதையடுத்து ஒரு சில விநாடிகளில் மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.
பின்னர் இலங்கை கடற்படையினர் எதையும் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர். நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்களை அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.