செய்திகள்

திருப்பத்தூரில் டீக்கடைக்காரர் தற்கொலை

Published On 2017-06-09 16:16 IST   |   Update On 2017-06-09 16:16:00 IST
திருப்பத்தூரில் டீக்கடைக்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா அலுவலக சாலையில் டீக்கடை நடத்தி வந்தவர் வெள்ளைச்சாமி (வயது26). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அய்யாபட்டி ஆகும்.

தனது சகோதரனுடன் இணைந்து திருப்பத்தூரில் டீக்கடை நடத்தி வந்தார். கடையின் மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தார்.

நேற்று மதியம் கடையில் இருந்து அறைக்கு சென்ற வெள்ளைச்சாமி அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சகோதரர் மாடி அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு வெள்ளைச்சாமி, தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளைச்சாமி எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News