செய்திகள்
புதுக்கோட்டை: அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது
புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த 3 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் ரூ.231 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகிய 3 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழா அழைப்பிதழில் திமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். அதிகாரிகளும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டு கொண்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ததாக எம்.எல்.ஏ. ரகுபதி தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் தங்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாக அவர் கூறினார்.
புதுக்கோட்டை பிருந்தாவனம் சந்திப்பில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.