செய்திகள்
மகேந்திரா சிட்டியில் என்ஜினீயர் மர்ம மரணம்: ஐ.டி. நிறுவன ஊழியர்களிடம் விசாரணை
செங்கல்பட்டு அருகே ஐ.டி. கம்பெனியில் என்ஜினீயர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து அந்நிறுவன ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் தளவாய்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. என்ஜினீயரான இவர் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி தொழில் பூங்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் தங்கும் விடுதியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரேவதி தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது மூக்கு, வாயில் ரத்தம் இருந்துள்ளதாகவும் போலீசில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளையராஜா வேலை பார்த்த ஐ.டி. நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.