செய்திகள்

பல்லாவரத்தில் மாட்டிறைச்சி தடையை கண்டித்து முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-30 14:59 IST   |   Update On 2017-05-30 14:59:00 IST
பல்லாவரத்தில் மாட்டிறைச்சி தடையை கண்டித்து காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாம்பரம்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி மீதான தடை உத்தரவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பல்லாவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அப்துல் ரவூப் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் நகர தி.மு.க. செயலாளர் இ.கருணாநிதி, வே.கருணாநிதி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, அமைப்புச் செயலாளர் யாகூப், மாவட்ட செயலாளர் சலீம்கான், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தேவ. அருள்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News