செய்திகள்

மாட்டு இறைச்சி விவகாரம்: மக்களுக்கு பிடிக்காததை செய்ய மாட்டோம்- தம்பிதுரை

Published On 2017-05-30 13:12 IST   |   Update On 2017-05-30 13:12:00 IST
மாட்டு இறைச்சி விவகாரத்தில் மக்களுக்கு பிடிக்காததை செய்யமாட்டோம் என சென்னை விமானநிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க., பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். அ.தி.மு.க.வுக்கென்று தனித்துவம் உண்டு. யாருக்கும் கைப்பாவையாக செயல்படவில்லை. தி.மு.க.வுக்கு வேண்டுமென்றால் அந்த பழக்கம் இருக்கலாம்.

மாட்டிறைச்சி தடைக்கு தமிழக அரசு கருத்து கூற தயங்குகிறது என்றும் மத்திய அரசுக்கு பயப்படுகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மக்களின் நலன் எதுவோ, மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். மக்களுக்கு பிடிக்காததை செய்ய மாட்டோம்.


இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் தேர்தல் ஆணையம் சில விளக்கங்களை கேட்க இருக்கிறது. ஓ.பி.எஸ். அணி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். நாங்களும் எங்கள் அணி சார்பிலும் கொடுத்து இருக்கிறோம். அதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த குழப்பமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News