செய்திகள்

கோவில் திருவிழாவில் வெடி விபத்து - குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்

Published On 2017-05-24 17:26 IST   |   Update On 2017-05-24 17:27:00 IST
மயிலாடுதுறை அருகே கோவில் திருவிழாவின் போது வெடி விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் நெய்வாசல் கிராமத்தில் தில்லை மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கரக உற்சவம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி நேற்று மாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது வாணவெடிகள் வெடிக்கப்பட்டது. அதில் ஒரு வாண வெடி எதிர்பாராதவிதமாக பக்தர்கள் கூட்டத்தில் விழுந்து வெடித்தது.

இதில் மாப்படுகையை சேர்ந்த சிலம்பரசன் மகள் பாவனா (2), ராஜேஷ், புவனேஸ்வரி, செல்வராஜ், செல்வா, துரைராஜ் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். பக்தர்கள் கூட்டத்தில் வாணவெடி விழுந்து காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News