செய்திகள்
குத்தாலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
குத்தாலம் அருகே குடும்ப பிரச்சினையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூரை அடுத்த அன்னியூர், ஆயனதாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது60). இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த கருணாநிதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள பள்ளவாய்க்கால் பகுதிக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டுள்ளார். இதை அறிந்த பக்கத்தில் இருந்தவர்கள் கருணாநிதியை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.