செய்திகள்

ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு: ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம்- கனிமொழி

Published On 2017-05-18 13:39 IST   |   Update On 2017-05-18 13:39:00 IST
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். சோனியா காந்தியின் உடல் நிலை சரியில்லாததால் ராகுல் காந்தி வருவதாக சொல்லப்படுகிறது.


விழாவுக்கு வருபவர்களுடைய விபரங்களை ஸ்டாலின் அறிவிப்பார். ஜனாதிபதி வருவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News