செய்திகள்

திருவரங்குளத்தில் புதிய மது கடையை திறக்க கூடாது: பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

Published On 2017-05-16 19:54 IST   |   Update On 2017-05-16 19:54:00 IST
திருவரங்குளத்தில் புதிய மது கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டரிடம் மனுக் கொடுத்துள்ளனர்.
திருவரங்குளம்:

திருவரங்குளம் அருகே வேப்பங்குடி ஊராட்சியில் உள்ள வேப்பங்குடி கிராமத்தில் திருவரங்குளத்தில் இயங்கி வந்த மதுபானக்கடையை அங்கே வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது.

இதனை அறிந்த பொதுமக்கள் கட்டிட உரிமையாளரிடம் மதுபானக்கடைக்கு கட்டிடம் கொடுக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். அதற்கு கட்டிட உரிமையாளர் இங்கு கடைக்காக கட்டிடம் கட்டப்படுகின்றது என்று கூறியுள்ளார். இருந்தாலும் பொதுமக்கள் இதனை நம்பாமல் மதுக்கடை வருவதற்காக அவசர வேலைகள் நடைபெறுவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சென்று மனுக்கொடுத்துள்ளனர்.

மீறி மதுக்கடையை இங்கு திறந்தால் பெண்கள் திரண்டு கடைமுன்பு சாகும் வரை போராட்டம் நடத்துவதாக கூறி சென்றனர்.

Similar News