செய்திகள்
மானாமதுரை சித்திரை திருவிழா: வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
மானாமதுரை ஆனந்தவல்லி–சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று வீர அழகர் வெண் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை:
மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 30–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் சிம்மம், அன்னம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை நடைபெற்றது.
இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலையில் தியாக வினோத பெருமாள கோவிலில் இருந்து புறப்பட்ட வீர அழகர் மானாமதுரை மரக்கடைவீதி, அக்ரஹாரம், அய்யப்பன் கோவில், பைபாஸ் ரோடு, ரெயில்வே கேட் வழியாக காலை 9.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு சிவாச்சார்யார்கள் வெண் கொற்ற குடை பிடித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் காலை 10 மணிக்கு வீர அழகர் வெண் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது விரதமிருந்து வீர அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீர்த்தவாரி நடத்தினர். தொடர்ந்து மழை இல்லாததால் தண்ணீர் இல்லாத வெறுமையான ஆற்றில் வீர அழகர் பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே இறங்கினார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
வீர அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் அதிமுகவினர் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
வைகை ஆற்றில் இறங்கிய வீரஅழகரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தொழில் அதிபர்கள் ஆனந்த கிருஷ்ணன், சீனியப்பா தியேட்டர் சுரேஷ், வனங்காமுடி திவான்ராஜ், சுப்பிரமணியன் அன்கோ ஜான், பெரியாண்டவர் சேம்பர் பிரிக்ஸ் லட்சுமணன், கோட்டையன் செட்டியார் பெட்ரோல் பங்க் வெங்கடேசுவரன், பி.ஜி. சேம்பர்ஸ் துபாய் காந்தி, ஏ.எல்.எஸ். ராமையா நாடார் உரிமையாளர் நாகராஜ், தொழிலதிபர் சுப்பையா, சின்னகண்ணணு£ர் வேலுச்சாமி, ஈஸ்வர் மோட்டார்ஸ் மணிவண்ணன், நமச்சிவாயம், திருமலா அக்வா பார்ம் துரைச்சாமி செட்டியார், கோட்டையன் செட்டியார் உள்பட பலர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா நடைபெற உள்ளது
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.