செய்திகள்

புதுக்கோட்டையில் நீட் தேர்வு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-11 18:44 IST   |   Update On 2017-05-11 18:44:00 IST
நீட் தேர்வில் மாணவர்கள் மீதான அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விக்கி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் சின்னத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், நகரச் செயலாளர் அன்பு மணவாளன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் நாராயணன், உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முகமதலிஜின்னா உள்ளிட்டோர் பேசினர்.

மாணவிகளின் உள்ளாடைகளைக் கலைந்து, கூந்தலைக் அவிழ்த்து, நகைகளைக் கழட்டி, மாணவர்களின் சட்டையைக் கிழித்து உளவியல் ரீதியி லான துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நீட் தேர் வுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு முறையையே ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Similar News