செய்திகள்

குடிநீருக்கு தண்ணீர் திறப்பு: பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது

Published On 2017-05-10 16:21 IST   |   Update On 2017-05-10 16:21:00 IST
பவானிசாகர் அணையில் இருந்து ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 565 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு நீர் ஆதரமாக உள்ள பவானிசாகர் அணையில் கடந்த ஒரு மாதமாக 41 அடியில் நீர் மட்டம் இருந்தது. தண்ணீர் வரத்து வினாடிக்கு சராசரியாக 100 கனஅடி இருந்தது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கபட்டது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 565 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர்வரத்து 94 கனஅடியாக இருந்தது.

அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

இதனால் 41 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடியாக குறைந்து இன்று காலை 39 அடியாக குறைந்தது. தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேலும் அணையின் நீர்மட்டம் குறைய கூடும் என்பதால் விவசாயிகள் மழையை நம்பி எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Similar News