செய்திகள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை தமிழ் புலிகள் கட்சியினர் திடீர் முற்றுகை: 105 பேர் கைது

Published On 2017-05-08 20:39 IST   |   Update On 2017-05-08 20:39:00 IST
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் இருந்து ஊர்வலமாக வந்தனர்.மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார்.

மாநில துணை பொதுச் செயலாளர் சபாபதி, இளம் புலிகள் மாவட்ட செயலாளர் ராமு, பொறுப்பாளர்கள் ஆதி அர்ஜூனன், மணிகண்டன் உள்பட கலந்து கொண்டனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கேட்டை மூடினர். இதனால் தமிழ் புலிகள் கட்சியினர் உள்ளே செல்ல முடியாமல் நுழைவு வாயிலில் நின்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தமிழ் புலிகள் கட்சியினரை கைது செய்தனர்.30 பெண்கள் உள்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர்.

Similar News