செய்திகள்

மதுராந்தகம் அருகே டிரைவரை கட்டிப்போட்டு கார் கடத்தல் - முகமூடி கும்பல் துணிகரம்

Published On 2017-05-03 16:11 IST   |   Update On 2017-05-03 16:11:00 IST
மதுராந்தகம் அருகே டிரைவரை கட்டிப்போட்டு முகமூடி கும்பல் காரை துணிகரமாக கடத்தி சென்றனர்.
மதுராந்தகம்:

பண்ருட்டி அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், கார் டிரைவர். இவர் துபாயில் இருந்து வந்த உறவினரை அழைப்பதற்காக நேற்று இரவு சென்னை நோக்கி காரில் வந்தார்.

மதுராந்தம் அருகே தொழுபேடு டோல்கேட் பக்கம் வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இறங்கினார்.

அப்போது இருளில் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் முகமூடி அணிந்தபடி வந்தனர். அவர்கள் விக்னேசை சரமாரியாக தாக்கினர். அவரது கை, கால்களை துணியால் கட்டி சாலையோரத்தில் தள்ளிவிட்டனர். பின்னர் காரை கடத்தி சென்றுவிட்டனர்.

விக்னேசின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டனர். கார் கடத்தல்காரர்கள் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழுபேடு டோல்கேட் அருகே வாகனங்களில் செல்பவர்களை தாக்கி கொள்ளை மற்றும் வாகன கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News