செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே போலி மதுபாட்டில்களுடன் 2 வாலிபர்கள் கைது

Published On 2017-05-03 12:36 IST   |   Update On 2017-05-03 12:36:00 IST
அச்சரப்பாக்கம் அருகே போலி மதுபாட்டில்களை கடத்தியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:

அச்சரப்பாக்கத்தை அடுத்த எலப்பாக்கம் கூட்டுசாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 384 மது பாட்டில்கள் இருந்தன. அனைத்தும் போலி மது பாட்டில்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை கடத்தி வந்த சூனாம்பேடு அருகே உள்ள பேட்டை கிராமத்தை சேர்ந்த துரை, சங்கரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போலி மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி மதுபாட்டில்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது. மதுபான தொழிற்சாலை எங்கு உள்ளது என்று அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News