செய்திகள்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று ராமானுஜர் அவதார தினவிழா
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார தினவிழா இன்று நடைபெற்றது. இத்தினத்தை முன்னிட்டு கோவிலில் இன்று லட்டக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன் ராமாஅவதாரத்தில் ராமருக்கு தம்பி லட்சுமணனாகவும் கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமரானகவும் தோன்றினார் என்பது புராணம்.
அதே ஆதிசேஷனே கலியுகத்தில் ராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது ஐதீகம். இவர் கி.பி. 1017-ம் ஆண்டு அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றினார்.
ஸ்ரீபெரும்புதூர் ஆசூரி கேசவசோமாஜி பட்டர் மற்றும் காந்திமதி தம்பதிக்கு ஒரே மகனாக பிறந்தார். இவரது தாய் மாமாவான திருமலை நம்பிகள் அக்குழந்தைக்கு இளையாழ்வார் என பெயர் சூட்டினார். இவருக்கு பூமிநாச்சியார், கமலாம்பாள் ஆகிய இரு சகோதரிகள் உண்டு.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேச பெருமாள், பாஷியகார சுவாமி கோவிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள்பாலித்து வருகிறார். இவரை வணங்கினால் சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கும், குழந்தை பாகியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு திருவா திரைக்கு 9 நாட்களுக்கு முன்பு சித்திரை பெருவிழா, அவதார உற்சவமாக நடைபெறும்.இந்த ஆண்டு ராமானுஜரின் 1000-வது ஆண்டு ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீபெரும் புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 21-ந் தேதி ராமானுஜர் அவதார தின விழா தொடங்கியது. வருகிற 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.விழாவையொட்டி நேற்று காலை திருத்தேர் பவனி விழா நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் ராமானுஜர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய விழாவான ராமானுஜர் அவதார தினவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணி அளவில் மஞ்சத்தில் இருந்து ராமானுஜர் புறப்பட்டு, தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.பின்னர் தாயார் சன்னதிக்கு சுவாமி வந்து அடைந்தார்.
இதைத் தொடர்ந்து ராமர் சன்னதி கண்டருதல், ஒய்யார நடை உற்சவம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மண்டபம் வந்தடைந்தது. இதையடுத்து சுவாமி திருஅவதார மண்டபத்தில் தொட்டில் சேவை நடைபெற்றது. தங்க பல்லக்கில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து சங்கு பால் அமுது சேவித்தல், திருமஞ்சனம் ஈரவாடை தீர்த்தம், திருபாவை சேவித்தல் நடைபெற்றது.
பிற்பகல் 1 மணி அளவில் ராமானுஜருக்கு திருமேணி சேவையுடன் கண்ணாடி அறையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று இரவு கண்ணாடி அறையில் இருந்து சுவாமி புறப்பட்டு நாலுக்கால் மண்டபத்தில் சுவாமி நித்திய விபூதி மங்களா சேவை நடைபெறுகிறது.
நாளை (2-ந் தேதி) காலை கூத்துமுறை தீர்த்தம், கந்தபொடி சேவையுடன் ராமானுஜர் புறப்பட்டு ஆண்டாள் சன்னதி வந்து அடைகிறது. அங்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெறும். பின்னர் அங்கிருந்து சுவாமி புறப்பட்டு `திருப்பரி வட்ட கொட்டி கடா வத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அங்கு ராமானுஜர் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.அவதார தினத்தை முன்னிட்டு கோவிலில் இன்று லட்டக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. காஞ்சீபுரம் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் இந்திரா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று சென்றன.
சென்னையில் இருந்து காஞ்சீபுரம், வேலூர் செல்லும் பஸ்கள் ஸ்ரீபெரும்புதூர் நுழைவு வாயிலில் அருகே நின்று பைபாஸ் வழியாக செல்லும். பக்தர்களின் கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் வன போஜன மடம் அருகே நிறுத்தப்பட்டது. விஐ.பி. கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் ஜெயின் கோவில் அருகே நிறுத்தப்பட்டன. பெண் பக்தர்கள் அனைவருக்கும் பெண்காவலர்கள் மூலம் செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்க சேப்டி பின் அணிவிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட போலீசார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.