செய்திகள்

சென்னை உள் நாட்டு விமான நிலையம் ‘சைலண்ட்’ நிலையமாக மாற்றம்

Published On 2017-04-29 16:09 IST   |   Update On 2017-04-29 16:09:00 IST
வருகிற மே 1-ந்தேதி முதல் சென்னை உள் நாட்டு விமான நிலையம் ‘சைலண்ட்’ விமான நிலையமாக மாற்றப்படுகிறது.
ஆலந்தூர்:

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய விமான நிலைங்களில் பயணிகளுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிப்பதில்லை. மாறாக எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல்கள் மூலம் தகவல் கொடுக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து சென்னை உள் நாட்டு விமான நிலையத்திலும் விமானம் ரத்து, தாமதம் மற்றும் நுழைவு வாயில் மாற்றம் குறித்த தகவல்களை பயணிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட மாட்டாது. எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் மூலமே தரப்படும்.



வருகிற மே 1-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அதே நேரத்தில் முக்கியமான தருணங்களுக்கு மட்டும் ஒலிபெருக்கி மூலம் தகவல்கள் தரப்படும். எனவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தை சைலண்ட் விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News