செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம்

Published On 2017-04-22 22:54 IST   |   Update On 2017-04-22 22:54:00 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:

போராட்டத்திற்கு டாக்டர்கள் சங்க தலைவர் லட்சுமிதரன் தலைமை தாங்கினார். டாக்டர் சங்க தலைவர் செல்வமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க செயலாளர் மதியழகன், தா.பழூர் வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவ பட்ட மேற்படிப்பில், அரசு 50 சதவீத இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற ஆணையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்றும், 7–வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டியும், மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரியும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மருத்துவ அலுவலர் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் அருண் பிரசன்னா, டாக்டர்கள் ரவிச்சந்திரன், மோகன், செந்தில் அனு‌ஷயா, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரதராஜன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கண்ணன் நன்றி கூறினார்.

Similar News