செய்திகள்

அரியலூர் அருகே லாரி மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2017-04-20 19:23 IST   |   Update On 2017-04-20 19:23:00 IST
அரியலூர் அருகே லாரியும் பைக்கும் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், வெங்கட்ரமணபுரத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சக்திவேல் (வயது 24). கூலி தொழிலாளி.

இந்நிலையில் சக்திவேல் நேற்று மோட்டார் சைக்கிளில் பொய்யாத நல்லூருக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது வெங்கட்ரமண புரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே சிமெண்ட் ஏற்றுவதற்காக அரியலூரில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது.

திடீரென லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த நெரிச்சி கோறை போலீசார் சக்தி வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் நாராயணசாமி (36) என்பவரை கைது செய்தனர்.

Similar News