செய்திகள்

நகை கொள்ளையில் மேற்கு வங்காள சிறுவன் கைது

Published On 2017-04-06 15:17 IST   |   Update On 2017-04-06 15:17:00 IST
நகை பட்டறை உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து 3 கிலோ நகையை கொள்ளையடித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

சவுகார்பேட்டை என்.எச்.போஸ் ரோட்டை சேர்ந்தவர் ராஜீவ் குளியா. நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் 10 பேர் வேலை பார்த்து வந்தனர்.

இதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேர் கடந்த மாதம் 6-ந் தேதி இரவு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து ராஜீவ் குளியாவுக்கு கொடுத்தனர். அதை குடித்த அவர் மயங்கினார்.

அதன்பின் 5 பேரும் பீரோவில் இருந்த 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினர். காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த ராஜீவ் குளியா நகை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து யானைக்கவுனி போலீசில் புகார் செய்தார். தப்பிய 5 பேரும் மேற்கு வங்காளத்தில் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜூலியட் சீசர் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளையடித்த 15 வயது சிறுவனை தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவனை இன்று மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை கொண்டு வந்தனர். மற்ற 4 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News