செய்திகள்

நாகப்பட்டினம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டம்: புதுவை முதல்வர் விளக்கம்

Published On 2017-03-29 12:25 IST   |   Update On 2017-03-29 12:25:00 IST
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அறிவித்த 31 இடங்களில் காரைக்கால் அல்ல "நாகப்பட்டினத்தில் ஒருபகுதி" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஆலந்தூர்:

டெல்லியில் இருந்து சென்னை வந்த புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

டெல்லியில் தமிழக விவசாயிகள் வறட்சி பாதிப்பு நிதி, கடன் தள்ளுபடி போன்றவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே புதுச்சேரி விவசாயிகள் சார்பாக இந்த கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

நானும் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். மத்திய விவசாய மந்திரியை சந்தித்து பேசுவதாக உறுதி அளித்திருக்கிறேன். விவசாயிகள் போராட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.



ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க 31 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் காரைக்கால், நெடுவாசல் இடம் பெற்றுள்ளது. இது பற்றி அந்த ஒப்பந்தத்தை நான் ஆய்வு செய்தபோது அது காரைக்கால் அல்ல என்பது தெரிந்தது.

அது காரைக்காலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்தில், ஒரு பகுதியாகும். அதை காரைக்கால் என்று குறிப்பிட்டுள்ளனர். அதுபற்றி நான் விவசாயிகளிடம் தெளிவுப்படுத்துவேன்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Similar News