செய்திகள்

டெல்லியில் போராட்டம்: தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் - கனிமொழி

Published On 2017-03-29 12:03 IST   |   Update On 2017-03-29 12:03:00 IST
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 16 நாட்களுக்கு மேலாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். பிரதமர் விவசாயிகளை சந்திக்க தயாராக இல்லை. அவர் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும்.



காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை. இதற்கு தமிழக அரசு நினைத்தால் தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பிரச்சினைகளை தீர்க்க வில்லை என்றால் மக்கள் போராட்டமாக அது மாறும். மக்கள் இனி பொறுத்து கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News