செய்திகள்
காஞ்சீபுரம் அருகே வாகன சோதனையில் 3 கொள்ளையர்கள் கைது
காஞ்சீபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.3.50 லட்சத்தை கொள்ளையடித்த 3 பேரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த உத்திரமேரூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உரக்கடை உரிமையாளர் வேலாயுதம் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு பைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்று அவரிடமிருந்து 3.50 லட்சத்தினை அபேஸ் செய்து சென்றனர்.
இது குறித்து வேலாயுதம் போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் போலீசார் எண்டத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் போலீசாரின் எச்சரிக்கையை மீறி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஜீப்பில் பின் தொடர்ந்து வந்து மடக்கி பிடித்தனர்.
காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த சுரேன், எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்கிற சத்யா மற்றும் ராஜசேகர் என்கிற குமார் என்பது தெரிய வந்தது. விசாரணையில் உத்திரமேரூர் வேலாயுதத்திடம் ரூ.3.50 லட்சத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் ராமாபுரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்ததாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.