செய்திகள்
காஞ்சீபுரத்தில் புகையிலை விற்ற வியாபாரிகள் மீது வழக்கு
காஞ்சீபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்ற வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை, வெள்ளைகேட், திம்ம சமுத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து கடையை நடத்தி வந்த ஆறுமுகம், ரேணுகா, சத்யவாணி, ராம மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் வாலாஜா பாத் பஜார் வீதி, சுங்குவார் சத்திரம் மொளச்சூர் பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற நாராயணன், வெங்கடேசன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.