செய்திகள்
காரைக்குடியில் 5¼ கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 3 பேர் கைது
கஞ்சாவிற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான 5¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை:
காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் செங்கை ஊரணி பகுதியில் வந்தபோது 2 பெண்கள் உள்பட 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசார் சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி விற்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் பாண்டியம்மாள் (வயது 45), பானுமதி (36), பாலச்சந்தர் என தெரியவந்தது.
கைதான 3 பேரிடம் இருந்து 5¼ கிலோ கஞ்சா மற்றும் ரூ. 3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்தமதிப்பு ரூ.55 ஆயிரத்து 250 ஆகும்.