செய்திகள்
சிவகங்கை அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவர் பேசாததால் இளம்பெண் தற்கொலை
சிவகங்கை அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவர் பேசாததால் மனமுடைந்த இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி பாலா (28). கணேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 6 மாதமாக கணேஷ் வெளிநாட்டில் இருந்து போனில் பேசவில்லை என்று பாலா மனவேதனையுடன் காணப்பட்டார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாலாவின் தந்தை முனியாண்டி சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
தாய் தற்கொலை செய்து கொண்டதால் 3 வயது குழந்தை பரிதவிப்புடன் காணப்பட்டது.