செய்திகள்
திருப்பத்தூர் அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
திருப்பத்தூர் அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (80). இவர் தனது மகள் வீட்டுக்கு செல்ல வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த லெட்சுமணன் நெற்குப்பை போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகராஜன் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.