செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்: கே.ஆர்.ராமசாமி

Published On 2017-02-25 09:29 IST   |   Update On 2017-02-25 09:29:00 IST
தமிழகத்தில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்று சட்ட பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
காரைக்குடி:

காரைக்குடியில் சட்ட பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியாது என அரசு கூறி உள்ளது. இந்த அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உரிய உதவியை மாநில அரசு செய்ய வேண்டும். மாநில அரசின் நிதி நிலைமை மோசமாகி வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை உள்ளது.

கடந்த 7 மாதத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ரேசன் கார்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களை, மேலே உள்ளவர்கள் என தவறாக கணக்கிட்டு, அவர்களது சலுகைகளை பறிக்கின்றனர்.

இந்த ஆட்சி நீடிக்க வழியே கிடையாது. எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இந்த அரசால் மக்களுக்கு நல்ல ஆட்சியை தர முடியாது.

பாமர மக்கள் தற்போதைய அ.தி.மு.க. அசை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இது தான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News