செய்திகள்

காரைக்குடியில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2017-02-23 18:06 IST   |   Update On 2017-02-23 18:06:00 IST
காரைக்குடியில் தொழிலாளியை பாம்பு கடித்ததில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகாததால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி:

காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவரை 3 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்துள்ளது. இதற்கு முறையான மருத்துவம் பார்க்காமல் நாட்டு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு முருகேசனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர், நேற்று ஊர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகம் பார்க்க செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார்.

நள்ளிரவில் அவரது மனைவி மகாலட்சுமி எழுந்து வெளியே வந்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் முருகேசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து, முருகேசன் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News