செய்திகள்

சிவகங்கை அருகே நர்சு கடத்தல்: வாலிபர் உள்பட 3 பேர் மீது புகார்

Published On 2017-02-23 16:43 IST   |   Update On 2017-02-23 16:43:00 IST
நர்சை கடத்தியதாக வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி அருகே உள்ள முருகபட்டியைச் சேர்ந்தவர் வேல்சாமி (60) விவசாயி. இவரது மகள் பிரியா (வயது 22). நர்சிங் படித்துள்ள இவர், சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.

இதே ஊரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (24). இவருக்கும், பிரியாவுக்கும் கடந்த ஓராண்டாக காதல் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த வேல்சாமி, மகளுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து ஊருக்கு வந்த பிரியா திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து உலகம்பட்டி போலீசில், வேல்சாமி புகார் செய்தார். அதில், மகாலிங்கம், அவரது பெற்றோர் சுப்பிரமணி- வீராயி ஆகியோர் சேர்ந்து, பிரியாவை கடத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பிரியாவை தேடி வருகிறார்.

Similar News