செய்திகள்

செங்கல்பட்டில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 52 பேர் காயம்

Published On 2017-02-23 13:43 IST   |   Update On 2017-02-23 13:43:00 IST
ஒரே நாளில் வெறிநாய் கடித்து 52 பேர் காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுன் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தபடி பொது மக்களை சுற்றிசுற்றி வந்தது. பஸ் நிலையத்தில் நிற்பவர்களை துரத்தி கடித்தது. நேற்று காலை செங்கல்பட்டு டவுன் மேட்டு தெருவை சேர்ந்த லோகநாதன் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவரை வெறிநாய் கடித்தது.

மேலும் சக்கரபாணி என்பவரையும், கல்லூரி மாணவி ரம்யா, பள்ளிக்கு சென்ற 5 வயது சிறுமி ராஜேஸ்வரி ஆகியோரையும் கடித்தது. அப்பகுதியிலேயே சுற்றிய அந்த நாய் பலரையும் பதம் பார்த்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் 52 பேரை கடித்து குதறியது நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆண்கள் 7 பெண்கள், 2 குழந்தைகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

Similar News