செய்திகள்

மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் பணம்- செல்போன் அபேஸ்

Published On 2017-02-21 20:01 IST   |   Update On 2017-02-21 20:01:00 IST
மருத்துவமனை வந்த பெண்ணிடம் பணம் மற்றும் செல்போன்களை அபேஸ் செய்ததாக காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த அரவிந்த்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டாக்டரிடம் காண்பித்து மருந்துகள் வாங்கிவிட்டு வீடு திரும்பியதும் அரவிந்த்குமார் மனைவி தனது கைபையை திறந்து பார்த்தார்.

அப்போது அதில் வைத்திருந்த 2 செல்போன்கள் ரூ.3,500 மற்றும் 2 ஏ.டி.எம்.கார்டுகள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர்கள் மருத்துவமனை வந்து விவரம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையின் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அரவிந்த்குமார் மனைவி மருந்து வாங்குவதற்காக கைப்பையை கீழே வைத்திருந்தபோது அங்கு காவலாளியாக இருந்த கணேசபுரம் பழனி (வயது 50) கைப்பையை திறந்து பணம் மற்றும் பொருட்களை அபேஸ் செய்வது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் காரைக்குடி வடக்கு போலீ சில் ஒப்படைக்கப்பட்டார். சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

Similar News